தலைப்பு செய்திகள்
அடுத்த அதிர்ச்சி!! காற்றில் பரவும் குரங்கு அம்மை!!

நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்து வந்த வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நைஜீரிய நாட்டில் தற்போது குரங்கு அம்மை வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு தற்போது குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகும். மேலும் இது மனிதர்கள் இடையே எளிதில் பரவாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 2 வாரங்களில் குணமடைந்து விடுவார்கள். அப்படி இருக்கும் போதிலும் சிலருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும்’’ என்று கூறியுள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்து வந்து சேர்ந்து குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய இங்கிலாந்து சுகாதாரத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கில் இருந்து பரவும் அம்மைநோய், இங்கிலாந்தில் முதன்முதலில் 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
