தலைப்பு செய்திகள்
ஆந்திராவில் கரையைக் கடந்த அசானி புயல்!! காற்று எச்சரிக்கை.

தமிழகத்தில் மே 8ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக உருவாகி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது. திடீரென இந்த புயல் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனையடுத்து இந்த புயல் மெல்ல வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,50 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.இதனைத் தொடர்ந்து,அசானி புயல்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திராவில் மசிலிப்பட்டணம் மற்றும் நர்சாபுரம் இடையே அமைதியாக கரையக் கடந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் கரையைக் கடந்த பிறகும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் . இதனால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
