BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கேரளா செல்லும் 22 ரெயில்கள் திடீர் ரத்து! தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து காயங்குளம் வரையிலான ரெயில் பாதைகளில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிது. இதனால் கேரள மாநிலத்திற்கு செல்லும் 22 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூறும்போது, ‘‘4 முதல் 8 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் 22 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில்வே சீரமைப்பு பணி நடைபெற்று வரும் 2 வழித்தடங்களிலும் பயணிக்க இருந்த ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தெற்கு ரெயில்வே அறிவிப்பின் படி, எர்ணாகுளம் முதல் காயங்குளம் வரையிலான ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் திடீரென்று 22 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கேரளாவிற்கு செல்ல இருந்த பயணிகள் என்ன செய்வதென்று தவித்து வருகிறார்கள்.

 

மாற்று வழிப்பாதை குறித்த அறிவிப்பு வரும் வரையில் அவர்கள் தங்கள் பயணத்தை வேறு வழியில் மேற்கொள்ளலாமா என்பது குறித்து சிந்தித்து வருகிறார்கள். 4 நாட்கள் முதல் 8 நாட்கள் வரையிலேயே இந்த தடை செயல்படுத்தப்பட இருப்பதால், தங்கள் பயணத்தை ஒத்தி வைப்பது குறித்தும் பொது மக்கள் யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )