தலைப்பு செய்திகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி அதிமுக கட்சித் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பேருந்து நிலையம் அருகில் .மற்றும் ரவுண்டானா பகுதியில் .அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மலர் தூவியும் இனிப்புகள் வணங்கியும் மரியாதை செலுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு .பள்ளிக் குழந்தைகளுக்கும் .பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் .கு.சித்ரா ஒன்றிய செயலாளர் .அண்ணாதுரை .டவுன் பஞ்சாயத்து தலைவர். துணை பஞ்சாயத்து தலைவர் .மாணவரணி செயலாளர். அம்மா பேரவை செயலாளர். வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.