BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சை ஞானம் நகரில் 24-வது பொங்கல்  விளையாட்டு போட்டி -ஆண்டு விழா.

தஞ்சை ஞானம் நகரில்

24-வது பொங்கல்
விளையாட்டு போட்டி -ஆண்டு விழா

வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசு வழங்கல்

தஞ்சை ஞானம் நகர் மாரியம்மன் கோவில் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் விளையாட்டு குழுவினர் சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இருபெரும் விழா நேற்று தொடங்கியது.
நேற்று விளையாட்டு மைதானத்தில் கோலப்போட்டி நடைபெற்றது. மாலையில் ஆண்களுக்கான கேரம் போட்டி நடைபெற்றது.
இரண்டாம் நாள் விழாவான இன்று காலை 8 மணிக்கு தொழிலதிபர் பெலிக்ஸ் ராஜ் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். இதையடுத்து நடந்த விளையாட்டுப் போட்டிகளை தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தொடங்கி வைத்தார்.
இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 3 வயது முதல் நான்கு வயது வரையிலான சிறுவர்களுக்கு 25 மீட்டர் ஓட்டம், பிஸ்கட் கவி ஓட்டமும், சிறுமிகளுக்கு 25 மீட்டர் ஓட்டம், உருளை கிழங்கு ஓட்டம் நடைபெற்றன.‌ இதனைத் தொடர்ந்து 5 வயது முதல் 6 வயதுள்ள சிறுவர்களுக்கு 25 மீட்டர் ஓட்டம், தவளை ஓட்டமும், சிறுமிகளுக்கு 25 மீட்டர் ஓட்டம், பலூனை உடைத்து பலூனை உடைத்து ஓட்டமும் தனித்தனியாக நடந்தது. இதையடுத்து 7 முதல் 8 வயது உடையவர்களில் மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், கங்காரு ஓட்டமும், மாணவிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பிஸ்கட் சாப்பிட்டு ஓட்டமும் நடைபெற்றது.
9-10 வயது உடையவர்களில் மாணவர்களுக்கு 75 மீட்டர் ஓட்டம், நண்டு ஓட்டமும், மாணவிகளுக்கு 75 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்பி ஓட்டமும் நடைபெற்றது.
பின்னர் 11-12 வயதுடைய மாணவர்களுக்கு 75 மீட்டர் ஓட்டம், சாக்கு ஓட்டமும், மாணவிகளுக்கு 75 மீட்டர் ஓட்டம், உருளைக்கிழங்கு சேகரித்தல் ஓட்டமும், 13-14 வயதுடைய மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், குச்சியில் சுழன்று ஓட்டம், மாணவிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், எலுமிச்சைப்பழ கரண்டி ஓட்டமும் நடைபெற்றன.
தொடர்ந்து 25 வயது வரை உள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், பந்து எறிதல், ஊசியில் நூல் கோர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
மாலையில் 20 வயது மேற்பட்டவர்களுக்கு இசை நாற்காலி, லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை பொது மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இன்று மாலை 6 மணியளவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளனர்.
விழாவுக்கானா ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் ஞானம்நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )