தலைப்பு செய்திகள்
உக்ரைனில் படித்து வரும் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தரும் படி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், ஷேக் முகமது மற்றும் ராஜேஷ் பாண்டியன் ஆகிய மூன்று மாணவர்களும் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
சில தினங்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் மாணவர்கள் தாயகம் திரும்பி வர முடியாமல் அங்குள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் வசித்து வருவதாகவும் அவர்களை மீட்டு தமிழகத்திற்கு பத்திரமாக மீட்டு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன் கூறுகையில் இதுவரை நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்த தகவல்களை உடனடியாக மாநில அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.