தலைப்பு செய்திகள்
மின்சார வெர்ஷனில் வெளியாக இருக்கும் மிக பிரபல ஸ்கூட்டர்.
இந்த நிதியாண்டுக்குள் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசும் இந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தது.
இதை தொடர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம், பிரபல ஆக்டிவா ஸ்கூட்டரை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நிதியாண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபடும் என்று அதன் தலைவர் அட்சுஷி ஒகடா கூறியுள்ள நிலையில், முதல்வாகனமாக ஹோண்டா ஆக்டிவா அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி, விரைவில் சார்ஜாகும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் இயங்கு திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்தால், தற்போது சந்தையில் உள்ள பஜாஜ் சேடக், டிவிஎஸ் ஐ.க்யூப், ஓலா எஸ் 1 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.