BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரேனில் சிக்கியுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத தாய்.

திருச்சி மணப்பாறை சொந்த ஊராகக் கொண்டவர் ஜெயலட்சுமி. இவர் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜேஷ். இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் அதிக அளவில் டொனேஷன் கேட்பதால் குறைந்த செலவில் படிப்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பி உள்ளார்.


ராஜேஷ் உக்ரைன் தலைநகர் கியூ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் தேர்வுகள் முடிந்து வர உள்ள நிலையில் உக்ரைனில்
ராஜேஷ் உள்ள பகுதியில் போர் உக்கிரமாக உள்ளதாக உள்ளதால் சுமார் 500 மாணவர்களுடன் பாதாள அறையில் தங்கியுள்ளார். இது குறித்து தனது தாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் உணவுக்கு கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் இதைத்தொடர்ந்து தன்னை விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட பதட்டமடைந்த தாயார் ஜெயலக்ஷ்மி இன்று காலை திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு காலில் விழுந்து கண்ணீர் விட்டு தனது மகனை எப்படியாவது மீட்டு தரவேண்டும் என கதறினார். இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறி உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )