BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வாயிலில் நிறுத்தப்பட்ட R15 பைக்கை அலேக்காக தூக்கிய திருட்டு கும்பல்:ஒரே நாளில் கண்டுபிடித்த சென்னை போலிஸ்.

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராமின் மகன் தினேஷ் (29). இவர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி இரவு தனது யமஹா R15 பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருக்கிறார்.

மறுநாள் காலை பார்த்தபோது தினேஷின் பைக் களவாடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்க்கிறது. இதனையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பைக் திருடுபோனது குறித்தி புகாரளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன்படி மதுரவாயல் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பைக் திருடப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் தினேஷின் பைக்கை மூவர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து பைக் திருடர்களை தேடி வந்த நிலையில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற இளைஞனை போலிஸாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து தினேஷின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் பைக் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவர் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியிலும் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வெங்கடேஷை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )