தலைப்பு செய்திகள்
திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தீவிர தேர்தல் பிரச்சாரம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
தமிழகத்தில் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை
6மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திமுக சார்பில் 16வதுவார்டில் போட்டியிடும் மதிவாணனை ஆதரித்து அரியமங்கலம், உக்கடை, உக்கடை மலை அடிவாரம், காயிதே மில்லத் நகர், திருப்பூர் குமரன் தெரு, சிவகாமிஅம்மா தெரு, உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு
அரியமங்கலம் திமுக
சார்பில் வட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
முதல்வர் தமிழகத்தில் வெற்றிபெற்று வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவோம் என தெரிவித்தார். அதன்படி இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அவர் சொன்ன வாக்குறுதியில் இதுவும் ஒன்று என்பதை நினைவு கூறுகிறேன். அவர் சொன்ன வாக்குறுதியை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார். அதைப்போல நான் இந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற காரணமாக இருந்தீர்கள் அதற்கான நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வெற்றி என்பது தொடர் வெற்றியாக மதிவாணனுக்கு வெற்றியை வழங்க வேண்டும்.
நாங்க வழங்கும் நிதியில் 16வது வார்டில் அந்தந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள்
என்னென்ன தேவை
அது சாலை பிரச்சினையாக இருந்தாலும் சாக்கடை பிரச்சினைகளும் கழிப்பிடம் கட்டுவதாக இருந்தாலும் குடிநீர் பிரச்சினையா இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக எப்படி தீர்த்து வைக்க வேண்டும் என்று உங்களுடைய குரலாக மாமன்றத்தில் மன்றத்திலேயே அவர் குரல் கொடுப்பார். ஆளுங்கட்சியை சேர்ந்த மதிவாணன் வெற்றி பெற்றால் எங்க கட்சி, எங்கள் ஆட்சி எனக்கு என் பகுதியில் என் மக்களுக்கு இதெல்லாம் தேவை செய்து கொடுங்கள் என்று உரிமையோடு கேட்கிற உரிமை உள்ளது. உடனடியாக செய்து கொடுப்போம் முதலமைச்சரை பொறுத்தவரைக்கும் சிறந்த முதலமைச்சர் யார் என்று எந்த நிறுவனம் கருத்துக்கணிப்பு எடுத்தாலும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொன்னால் அது தமிழகத்தினுடைய முதலமைச்சர் தான் என்கின்ற பெயர் பெற்றிருக்கிறார். அந்த நல்ல பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் உங்களுடைய கோரிக்கைகள் உங்களுடைய தேவைகளை எல்லாம் உடனுக்குடன் கேட்டறிந்து அதை உடனடியாக செய்தால்தான்.
முதலமைச்சர் அவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் போது எதிர்க்கட்சிகள் பற்றி விமர்சனம் செய்யகூடாது என்று கூறினார்,
வருகிற19ஆம் தேதியன்று நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் நீங்கள் 16வது வார்டில் போட்டியிடுகின்ற மதிவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோன் என தெரிவித்தார்.