தலைப்பு செய்திகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால பூஜை.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால பூஜையும் 10,008 நல்லெண்ணெ,ய் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடும்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்தத் திருக்கோவிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயத்தில் 10,008 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி முதல் கால பூஜையில் 108 குடம் பாலபிஷேகம் செய்து சிவனடியார்கள் மூலம் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடி
அதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜையில் விசேஷ பஞ்சாமிர்த அபிஷேகமும், மூன்றாம் கால பூஜையில் 108 இளநீர் அபிஷேகமும், நான்காம் கால பூஜையில் மகாஅபிஷேகமும் நடைபெற உள்ளது.
இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தகோடிகள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சிவபெருமானை தரிசித்து வருகின்றனர்.