BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம்.

சசிகலாவை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் ஓ. ராஜா, (தேனி மாவட்ட ஆவின் தலைவர் )
முருகேசன், (தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் )
வைகை. கருப்புஜி, (தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் )
சேதுபதி, (கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் ) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவேண்டும் என தேனி மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, பகிரங்க மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில், நேற்று திருசெந்தூர் வந்திருந்த சசிகலாவை ஓ. பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )