BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்!! மார்ச் 8ல் தீர்ப்பு !

சேலம் மாவட்டம் ஓமலூரில் வசித்து வந்தவர் கோகுல்ராஜ்.இவர் 2015ல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.தன்னுடைய வகுப்பில் படித்து வந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரி கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் திட்டமிட்டு ஆணவக்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் 2 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் மற்றவர்கள் மீது தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கான தண்டனை குறித்த தகவல்கள் மார்ச் 8 ம் தேதி செவ்வாய்கிழமை அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )