தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல்.
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர் காமாட்சியம்மன் தோட்டம் வெண்ணாற்றங்கரை பகுதியில ;சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தினார். போலீசை கண்டதும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். பின்னர் அதில் சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த பாலு என்பவரை தேடி வருகிறார். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தார்.
CATEGORIES தஞ்சாவூர்