BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கூட்டணி தர்மத்தை மீறியதால் ஸ்ரீபெரும்புதூர் மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  10நிமிடங்கள் தியானம் செய்து நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டணி தர்மத்தை மீறியதால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் 10நிமிடங்கள் தியானம் செய்து பின்னர் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றன.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை கழகம் ஒதுக்கியது.அதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் என்பவரின் மனைவி செல்வமேரி என்பவர் போட்டியிட்டார்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி என்பவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உத்தரவை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு கூட்டணி தர்மத்தை மீறி வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து தன்னை சந்தித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர்
பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா இன்னும் செய்யாதை கண்டித்தும், திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை மீறியதாலும்,கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி உள்ளிட்ட திரளான காங்கிரசார் சுமார் 10நிமிடங்கள் வரை தியானத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ராஜீவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு பாதுக்காப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் இதுதொடர்பாக திமுக ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ்குமாரை திமுகவினர் தொடர்புக்கொண்டு கேட்கும்போது தேர்தல் சமயத்தில் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்போது உடல் சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது, உடல்நிலை சரியான பிறகு இது குறித்து பேசுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )