தலைப்பு செய்திகள்
தஞ்சாவூரில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் 27 அவசர ஊர்திகளும் 2 இருசக்கர வாகன அவசர ஊர்தியும் பயன்பாட்டில் உள்ளது தற்போது ஐந்து புதிய பகுதிகளையும் சேர்த்து தஞ்சாவூர் மாவட்ட மக்களின் தேவைக்காக மொத்தம் 32 அவசர ஊர்திகளும் 2 இருசக்கர அவசர ஊர்தி உள்ளது இந்த 32 அவசர ஊர்திகளில் ஒரு அவசர ஊர்தி ஆனது பச்சிளம் குழந்தைகளின் அவசர தேவைக்காகவும் 5 அதிநவீன வசதிகள் கொண்ட அவசர ஊர்திகளும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் மருவூர்,மெலட்டூர், பந்தநல்லூர் , வாண்டையார் இருப்பு, பாப்பாநாடு ஆகிய பகுதிகளுக்கும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே செயல்பட்டு கொண்டிருக்கும் பழைய ஆம்புலன்ஸ் பதிலாக புதிய ஒரு ஆம்புலன்ஸ் தரப்பட்டுள்ளது இந்த 6 வாகனங்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தனர், இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன் டிகேஜி மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
