தலைப்பு செய்திகள்
பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்; 5 மாநில தேர்தல் முடிவதையொட்டி விலை உயருமா?நாளை விலை என்ன ஆகுமோ என கலக்கம்.
பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்; 5 மாநில தேர்தல் முடிவதையொட்டி விலை உயருமா?.. நாளை விலை என்ன ஆகுமோ என கலக்கம்.
5 மாநில தேர்தல் முடிவடைவதையொட்டி பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சத்தால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதே நேரம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயரும் அபாயத்தை மறைமுகமாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதாக கூடிய அவர் தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததாக ஒன்றிய அரசை சாடி இருந்தார்.
இந்நிலையில் இன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வருவதால் எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் பெட்ரோல் டேங்குகளை மக்கள் நிரப்பி வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.