தலைப்பு செய்திகள்
மகளிர் தினம்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகிற நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், சில நேரங்களில் ஆணினும் மேலானவள் மற்றபடி நிகரானவள், உன் தியாகத்தை திண்மையை கற்றுக்கொள்ளாமலே கழிகிறது ஆண்கூட்டம்… என்று பதிவிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized