தலைப்பு செய்திகள்
கள்ளக்காதலால் கணவன் தற்கொலை !
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா இவர் மனைவி பூஜா இவர்கள் குடும்பத்தோடு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசித்து வந்தனர் கிருஷ்ணா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கிருஷ்ணா இரு நாட்களுக்கு முன்பு பல மணி நேரமாக செல்போனில் அவர் காதலித்து வந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது இதனை பூஜா தடுத்துள்ளார்.
உடனடியாக கிருஷ்ணா மட்டும் பூஜாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது உடனடியாக பூஜா கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார் அதன் பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் மேலும் பிரேத பரிசோதனைக்காக அவருடன் அனுப்பி வைக்கப்பட்டு மேலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.