BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன்  500 கோடி மதிப்பில் 3 புதிய பிரிவுகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை நிறுவனத்தின் சார்பில் தொழிற்சாலையின் வளாகத்திற்குள் 500 கோடி மதிப்பில் 3 புதிய பிரிவுகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை 1998ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 2000-ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ளன இதில் கூடுதலாக புதியதாக 500 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய பிரிவுகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வுகள் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கண்ணாடித் தொழிற்சாலை உலகின் முதலாவது மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. இதில் 10,000 சதுர மீட்டர் பரப்பில் கொண்டது.


75 நாடுகளில் உள்ள செயின்ட் கோபின் தொழிற்சாலையில் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு, சிறு குறு நடுத்தர அமைச்சர் தாமோ அன்பரசன்,ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை தொழிற்சாலையின் தலைமை செயல் அதிகாரி பெனோயிட் பாஸின், பி.சந்தானம் மற்றும் தொழிற்சாலையின் தலைமை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் தொலைநோக்கு இலக்கான ஒரு டிரில்லியன் டாலர்களாக நிலைக்கு பசுமை தமிழகம் உருவாக்கத்தை உருவாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதாக தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )