தலைப்பு செய்திகள்
கால அவகாசம் நீட்டிக்க மதுரைக்கிளை பரிந்துரை!!

காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதியின் கால அவகாசம் நிறைவு பெறவுள்ளதால் அனுமதியை மேலும் நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அனுமதி பெறப்பட்ட 30 கிணறுகளில் 21 கிணறுகளை மட்டுமே ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது.
இது குறித்த விசாரணையில், காவிரி படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கான கால அவகாசத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நீட்டிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
