தலைப்பு செய்திகள்
காங். கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி கருத்து.

காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய இடங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்றியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
