தலைப்பு செய்திகள்
ஜம்முவில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து !

ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களை அழைத்து வருவதற்காக சென்ற சீட்டா ஹெலிகாப்டர் தொழில்நுட்ப காரணமாக விபத்துக்குள்ளானது. சீட்டா ஹெலிகாப்டர் ஆசாத் ஜம்மு பகுதியில் தரை இறங்க முயற்சி செய்யும்போது விபத்துக்குள்ளானது இந்த விபத்து குறித்து விசாரணை நடந்தது முதல் கட்டமாக வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதில் பயணித்த இராணுவ வீரர்களில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் எனவும் தகவல் வெளியானது மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
மேலும் விபத்து எவ்வாறு நடந்தது என இரண்டாம் கட்டமாக விசாரணை நடந்து வருகிறது கூடிய விரைவில் விபத்து குறித்து தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
