தலைப்பு செய்திகள்
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பக்கத்து வீட்டு பெண் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனைவி மனு.

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பக்கத்து வீட்டு பெண் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனைவி மனு- தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மணியங்குழி பகுதியை சேர்ந்த அணித்தங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்,அதில் குறிப்பிட்டுள்ளதாவது” தனது பக்கத்து வீட்டை சேர்ந்த உஷா தனது கணவரை அடியாட்கள் வைத்து தாக்கியுள்ளார் இதுகுறித்து தான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன் ஆனால் போலீசார் தாக்கிய நபர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட உஷா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தனது கணவர் தாக்கப்பட்ட விஷயத்தில் முதல் குற்றவாளியான உஷா மீது போலீசார் வழக்கு தொடர வேண்டுமென கேட்டும் தங்களை பழிதீர்க்கும் எண்ணத்தில் உஷா இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு இன்று குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தம்பதியினர் மனு அளித்தனர்.
