தலைப்பு செய்திகள்
கல்லூரி ஆசிரியரால் மாணவி தற்கொலை..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் இந்து பிரியா இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் மகளிர் தினத்தன்று இந்து பிரியாவின் தோழி கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளார். ஆனால் இதை அறிந்த ஆசிரியர்கள் இந்து பிரியாவை திட்டியுள்ளனர்.
இதனால் மிகவும் மன உளைச்சலுடன் இருந்த இந்து பிரியா வீட்டில் பெற்றோரிடம் நடந்த உண்மையைக் கூறினார் மறுநாளும் இதுபோன்று கல்லூரிக்கு சென்று வீட்டிற்கு வந்து அறையை பூட்டி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதற்கு இரண்டு ஆசிரியர்கள் தான் காரணம் எனவும் அந்த ஆசிரியர்கள் நான் செய்யாத தவறுக்கு என்னை திட்டியதாகவும் மேலும் என்னை கல்லூரிக்கு வரவேண்டாம் எனவும் கட்டாயப்படுத்தியதாக அவர் அதில் எழுதியுள்ளார். மேலும் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து காவலர்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்