தலைப்பு செய்திகள்
தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் “வடகிழக்கு மாநில கலைஞர்கள்” பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்ச்சி துவங்கியது.. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு..!!
தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் வடகிழக்கு மாநில கிராமிய கலைஞர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை தென்னகத்தை சேர்ந்த மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் 4 நான்கு நாட்கள் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சி துவங்கியது.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டவர்கள் முரசு கொட்டி இந்நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.
அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர் , அருணாசலப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு இந்நிகழ்ச்சியை கண்டுரசித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.