தலைப்பு செய்திகள்
மருந்து கடைகளுக்கு தீ.. பணியாளருக்கு கத்திகுத்து.. மருத்துவ மாணவர்கள் வெறிச்செயல்.
மருந்து கடைகளுக்கு தீ வைத்ததோடு மருந்து கடை ஊழியர்களை மருத்துவ மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது.
இதையடுத்து மருத்துவ மாணவர்கள் ஒன்றுசேர்ந்து மருந்து கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். அதோடுமட்டுமல்லாமல், அங்கிருந்த 4 கடைகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் அடுத்தடுத்து கடைகளுக்கு தீ பரவியது. மேலும் மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தாக்குதல் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர் தடுக்க முயன்றப்போது, அதில் சிக்கிய போலீசார் காயமடைந்தனர்.
தீவைத்து எரித்ததில், கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதனால் அப்பகுதியில் மருந்து வாசனை பரவி மக்கள் அச்சத்தில் ஆழ்த்தியது. பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் அனைவரும் தப்பியோடினர். இதனிடையே, அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டடு, மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.