BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வீட்டுக்கு நடந்து சென்ற சிறுமியின் அலறல் சத்தம்.. இரவில் நடந்த பயங்கரம் !!

இரவில் தனியாக நடந்து சென்ற பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதேபகுதியில் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த சிறுமி, அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து இரவு 11 மணிக்கு தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அதாவது வீட்டின் அருகே தான் உறவினர் வீடு என்பதால் நடந்தே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி அதேபகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் வழிமறித்து, சிறுமியிடம் பேச்சுகொடுத்துள்ளார். பின்னர் திடீரென, சிறுமியின் வாயை பொத்தி, அருகில் இருந்த பொது கழிப்பறைக்கு தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதை உணர்ந்த மணிமாறன், சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள், பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதுபற்றி எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மணிமாறனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )