BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைன் போர் சூழல் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.

உக்ரைன் போர் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து மதிப்பாய்வு செய்ய பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதன் விளைவாக உலக அளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து மதிப்பாய்வு செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போர் காரணமாக உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் மற்றும் முப்படைகளின் தயார் நிலை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )