தலைப்பு செய்திகள்
30,000 லிட்டர் உற்பத்தி திறன்.. மதுரையில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலை! திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.

மதுரை: தேசிய பால் வள வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ. 66 கோடியில் 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் ஆலையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டி.எல்.எஃப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து சென்னை தரமணியில் சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில் அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மதுரை ஆவின் பால் பண்ணை வளாகத்தில் புதிய ஐஸ் கிரீம் ஆலையை திறந்து வைத்தார். தேசிய பால் வள வாரியம் சார்பில் ரூ. 66 கோடியில் 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் ஆலையை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். தேசிய அளவிலான திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின். பள்ளி, விடுதி கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வளத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுடன் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
