BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலு, பரனூர் உள்ளிட்ட நகராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். 8 சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவர் கூறினார்.

மேலும், சென்னை – செங்கல்பட்டு 8 வழிச்சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், சாலை திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், ஏற்கெனவே இருந்த அரசுதான் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )