BREAKING NEWS

திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.

திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.

திமுககழகப் பொதுச் செயலாளர் பதவியேற்று மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களைவேலூர்மாவட்ட திமுக சார்பாகவும்காட்பாடி தொகுதியின் சார்பாகவும்,

 

 

காட்பாடி ரயில்வே நிலையத்தில் கரகாட்டம் சிலம்பாட்டம் செண்டி மேளம் பேண்ட் வாத்தியங்கள் தாரை தப்பட்டை முழங்க மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் ரட்சகன். வேலூர் மாவட்டம செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார்.

 

 

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தன்காட்பாடி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜ் வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த மாநகர மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்பின் போது ரயில் நிலையம் முதல் சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை வரை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

 

 

இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

 

இது பார்ப்போரை சற்று மன வருத்தத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் காணப்பட்டனர்.

 

 

இருந்த போதும் அவ்வழியாகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கழகத் தோழர்கள் வழி விட்டு நின்றது கூடியிருந்த மக்களுக்கு பார்த்த மக்களுக்கு சற்று மகிழ்ச்சி அளித்தது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )