BREAKING NEWS

திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் சுண்டே குப்பம், திம்மாபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட விழா நடைபெற்றது. இதில் சுண்டே குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள், திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சி. துரைசாமி ஆகியோர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் பத்மலதா கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி வட்டாட்சியர் பொன்னாலா, ஒன்றிய கழகச் செயலாளர் தேங்காய் சுப்ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சுப்பிரமணி, தனி ஆட்சியர் சரவணமூர்த்தி, திராவிட கழக மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

CATEGORIES
TAGS