திருச்சி
கண்ணனூர் மற்றும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்க
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும்
ச. கண்ணனூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று திமுக மற்றும் கூட்டனி கட்சிகளான மதிமுக,காங்கிரஸ்,சிபிஎம்,மனிதநேயம் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ச. கண்ணனூர் பேரூராட்சியில் மொத்தம்
15வார்டுகள் உள்ளது. இதில் திமுக
13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,, மதிமுக 1, என வேட்பாளர்கள் ச. கண்ணனூர் பேரூராட்சியில் தேர்தல் அலுவலர் ஜோசப் அனினியோ ஆண்டனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.இதில் திமுக 15 ,மதிமுக 1, காங்கிரஸ் 1, மனிதநேயம் கட்சி 1 . என 18 வேட்பாளர்கள் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்
முன்னதாக மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அலுவலகத்திலிருந்து எம்எல்ஏ தலைமையில் வான வேடிக்கை, டிரம் செட் முழங்க பேரணியாக வந்து திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந் நிகழ்வில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் சிவசண்முகக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்பி. இளங்கோவன், சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகரன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர்,துணை தலைவர் கேபிஏ செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.