திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூஜை போட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
இந்தக் கட்டிடத்தில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் திட்ட அலுவலர் அலுவலகம் மற்றும் கலெக்டர் நேர்முக உதவியாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், செயல்பட்டு வந்தது.
தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு இந்த அலுவலகங்கள் சென்று விட்டதால் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
தற்போது குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தனது சொந்த கட்டிடத்தில் நேற்று பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு பூஜை போட்டு அலுவலகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என். சங்கர், ஜெ.மணவாளன் தலைமை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம் பூஜை போட்டு அலுவலகப் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் டி.ஆர். ஞானசேகரன் நெல்லி வாசல் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு செல்வம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அனுமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ன வேடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.