BREAKING NEWS

திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .

திருவிளையாட்டம் ஊராட்சியில்  பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .

திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி. தரங்கம்பாடி, மே.14 மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

திருவிளையாட்டம் ஊராட்சி குறும்பக்குடி, ஆலக்கரை,கோவில் பத்து ஆகிய கிராமமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் சாலை வசதிகள் இல்லாததால் குறும்பகுடி பகுதியில் உள்ள நல்லாடை முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றி குறுக்கே ஒத்தையடி மரப்பாலம் வழியாக பொறையார் , காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பல ஆண்டுகளாக சென்று வந்தனர். மேலும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைகாலங்களில் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதி சேர்ந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ 1. கோடியே 70 லட்சத்து 15, ஆயிரம் மதிப்பீட்டில் குறும்பகுடி மற்றும் நல்லாடை முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றி குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

தற்போது குரும்பகுடி- நல்லாடை முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS