தூத்துக்குடியில் மீன் பிடி தடை காலத்திற்கு பின்னர் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் நன்றாக நிறைய மீன்கள் கிடைத்ததால் அதிகமான மீன் வரத்து காரணமாக மீன்கள் விலை போகவில்லை என மீனவர்கள் கவலை .
தூத்துக்குடி மாவட்டம்
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ல் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது இந்த தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
நேற்று இரவு 10 மணிக்கு இவர்கள் கரை திரும்புவார்கள் 60 நாட்களுக்குப் பிறகு சென்றதால் அதிக அளவில் மீன் மீன்கள் கிடைத்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் வேம்பார் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர். இவர்கள் நேற்று இரவு எட்டு மணி முதல் கரை திரும்ப ஆரம்பித்தனர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகுகள் நிறுத்தும் தளத்திற்கு படகுகளில் வந்த மீனவர்கள் தங்கள் படகுகளில் பிடித்து வந்த மீன்களை மீன் ஏள கூடங்களில் வைத்து ஏலம் விட்டனர்.
இதில் நேற்று அதிக அளவு மீன்கள் வந்ததால் குறைந்த விலைக்கு விலை போனது கடந்த 60 நாட்களும் விசைப்படகுகள் மீன்பிடித்த செல்லாததால் நாட்டுப் படகு மீனவர்களின் மீன்கள் மட்டுமே சந்தைக்கு வந்ததால் மீன் விலை அதிகமாக இருந்து வந்த நிலையில் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்று அதிக மீன்கள் வந்ததால் நேற்று விலை மிகவும் குறைந்து காணப்பட்டது இது தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மீனவர்களுக்கு கவலையை அளித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.