BREAKING NEWS

தூத்துக்குடி நாசரேத் CSI கமிட்டி உறுப்பினர் நியமன பிரச்சனை.பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தூத்துக்குடி நாசரேத் CSI கமிட்டி உறுப்பினர் நியமன பிரச்சனை.பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தூத்துக்குடி நாசரேத் CSI திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் எபனேசர் ஆலயத்தில் கமிட்டி நம்பர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சபை போதகர் ஜெபக்குமார் ஜாலிக்கும் சபை பொதுமக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் பீட்டர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எபனேசர் ஆலயத்தில் சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் எதிர் தரப்பினர் ஆலய குருவானவர் ஜெபக்குமார் ஜாலி சார்பில் திருமண்டலத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்ட சபை போதகர்கள் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார்

தூத்துக்குடி நாசரேத் CSI திருமண்டலம் கிருஷ்ணராஜபுரம் எபனேசர் ஆலயத்தில் கமிட்டி நம்பர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சபை போதகர் ஜெபக்குமார் ஜாலிக்கும் சபை பொதுமக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் பீட்டர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எபனேசர் ஆலயத்தில் சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் எதிர் தரப்பினர் ஆலய குருவானவர் ஜெபக்குமார் ஜாலி சார்பில் திருமண்டலத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்ட சபை போதகர்கள் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்ததால் அப்பகுதியில் நேற்று இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது

ஏற்கனவே நேற்று முன்தினம் சபை போதகர் ஜெபக்குமார் ஜாலி என்பவர் வருகிற இரண்டாம் தேதி சபையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கடிதம் செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட தலைவர் செயலாளர்கள் கையொப்பமிட்டு அனுப்பப்பட இருந்த நிலையில் கமிட்டி உறுப்பினர் அல்லாத விஜயகுமார் என்பவரையும் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை கண்ட சபையின் செயலாளர் பீட்டர் ஆட்சேபனை தெரிவித்ததால் சபையின் தலைவர் சபை போதகர் ஜெபக்குமார் ஜாலிக்கும் செயலாளர் பீட்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த வாக்குவாதம் முற்றி அசிங்கமான வார்த்தைகளை பேசிய நிலையில் போதகர் ஜெபக்குமார் ஜாலியன் மாமனார் பீட்டரை செருப்பைக் காட்டி அடிக்க வந்ததாக கூறி நேற்று முன்தினம் சபை பொதுமக்கள் வீட்டிற்கு ஆதரவாக வந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அறிந்த வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பீட்டர் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி சபை மக்களை கலைந்து போக செய்துள்ளனர் இந்த நிலையில் சபைச் செயலாளர் பீட்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் நேற்று இரவு சபை போதகர் ஜெபக்குமார் ஜாலி திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், திருமண்டல செயலாளர் வான் ஸ்டாக், திருமண்டல லே செயலாளர் கிப்ட்சன் உட்பட 40 க்கும் மேற்பட்ட போதகர்களுடன் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து வட பாகம் காவல் நிலைய காவல்துறையினர் இன்று அல்லது நாளை வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் புகார் கொடுக்கச் சென்ற போதகர் தரப்பினர் கலைந்து சென்றனர்

ஆனாலும் சபை மக்கள் சார்பில் புகார் கொடுத்த செயலாளர் பீட்டர் தரப்பினர் ஆலயத்தின் உள்ளே இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது

சபையின் போதகரும் தலைவருமான ஜெபக்குமார் ஜாலி ன் வீடு ஆலயத்தில் உள்ளேயே இருக்கின்ற நிலையில் சபை போதகர் ஜெபக்குமார் ஜாலி உள்ளே வர முடியாமல் ஆலயத்தின் வாசலிலேயே ஆலய வளாகத்தில் சபை மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்ததால் போதகர் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது இதுகுறித்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர் நாளை நடைபெற உள்ள அமைதி பேச்சு வார்த்தைக்கு பின்பு எதுவானாலும் முடிவெடுப்போம் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS