BREAKING NEWS

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது

 

தமிழக-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு 12 நாட்களுக்கு முன்பாகவே தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகில் உள்ள பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் விழாவிற்கான கொடிமரம் நட்டு, கண்ணகி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதேபோன்று இந்த ஆண்டு விழாவிற்காக கண்ணகி உருவம் பதித்த கொடியுடைய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து அதனை கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடி மரத்தினை நட்டு வைத்து கொடி கம்பத்திற்கு விசேஷ பூஜைகளை நடத்தினார்கள்.

விழாவில் முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தி இறை வழிபாடுகளை செய்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இறைவி நடன நாட்டியப்பள்ளி மாணவி மனிஷா என்பவர் தன்னுடைய அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள், பளியங்குடி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்கெட்டை நிர்வாகிகள் கூறும் பொழுது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்ணகி கோயிலுக்குரிய பாதையை சரி செய்தும், 200 ஆண்டுகள் பழமையான கோயிலை புதுப்பித்தும் செய்வோம் என்ற கோரிக்கையை செயல்படுத்தினால் தான் அவர்கள் கண்ணகி அருளால் வெற்றி பெற முடியும் என்று கூறினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS