தேனி மாவட்டம் தேவாரம் சாக்குலத்துமெட்டு சாலையை அமைத்து தர பொதுமக்கள் கவனயீர்ப்பு கூட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து கேரள மாநிலம் சாக்கலத்து மெட்டுக்கு செல்லும் சாலை சம்பந்தமாக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தேவாரம் பெருமாள் கோவில் மைதானத்தில் பொதுமக்கள் சார்பாக கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இந்த கூட்டத்தின் தீர்மானமாக சாக்குலத்து மெட்டு சாலையை அமைத்து தராவிட்டால் வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் புறக்கணிக்கப்படுவதாக அறிவித்தனர்.