தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலய பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர் பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொன்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது விரதம் இருந்த பக்தர்கள் காளியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் பெரும் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமவாசிகள் சின்ன சிவகுமார்,சின்னதுரை,மற்றும் கிராம நாட்டாமைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.