தேரிழந்தூரில் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் துவக்க விழா!

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அருகே தேரிழந்தூரில் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இந்த சங்கமானது 100-ஆண்டுகள் பழமையானது.
பக்ரீத் பண்டிகை முடிவடைந்த நிலையில் ஜமாத்தார்களும்,அப்பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்படாமல் இருந்த சங்கத்தை மீண்டும் புத்துணர்ச்சியோடு எங்கள் ஊரின் வளர்ச்சியே எங்களது நோக்கம் என்ற எண்ணத்தோடு மீண்டும் துவங்கப்பட்டது.
இதில் அப்பகுதி மக்களின் திறன்மேம்பாட்டு பயிற்சி,மருத்துவ முகாம், உடல் நலம்,கல்வி வேலை வாய்ப்பு,தொழில் முனைவோருக்கான அறிவுரைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மது மற்றும் போதை மறுவாழ்வு மையம்,இரத்ததான முகாம்,ஆம்புலன்ஸ் சேவை என தேரிழந்தூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் இந்த சங்கம் நேற்றைய முன்தினம் துவங்கப்பட்டு அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தேரிழந்தூர் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கான தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில் ஒரு பகுதியாக தேரிழந்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத்தர்களும்,இளைஞர்களும் ஊர் பொதுமக்களும் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.