நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் ஜோடி பெருமைகள்!

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நடிப்பில் வல்லவர் என்பதும், சரியான நேரத்திற்கு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார் என்பதும் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயமாகும். ஆனால் அவரது ஜோடி பெருமைகள் குறித்து சொல்லியாக வேண்டும்.
1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசனுக்கு ஜோடி பெருமைகள் குறித்தும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிறது.
1962 ஆம் ஆண்டு டைரக்டர் பி. ஆர். பந்துலுவின் டைரக்ஷ்னில் வெளியான பலே பாண்டியா படத்தில் நடிகை ஜெயலலிதாவின் தாயான நடிகை சந்தியாவுக்கு சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்தார். அவரது சக காலத்தில் பத்மினி, சரோஜாதேவி, கே. ஆர். விஜயா, பானுமதி போன்ற முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த நடிகை லட்சுமி போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு கமலஹாசன், ரஜினிகாந்த் காலத்தில் அவரது ஜோடிகளான ஸ்ரீ பிரியா, ஸ்ரீவித்யா போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார்.
1972 ஆம் ஆண்டு டைரக்டர் ஏ.சி. திருவலோகசந்தர் இயக்கிய பாபு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஸ்ரீதேவியை தனது இரண்டு கரங்களால் தூக்கிக் கொண்டு இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்ற பாடலை பாடி நடித்த சிவாஜி கணேசன் அதே பேபி ஸ்ரீதேவி குமரியான பிறகு டைரக்டர் டி. யோகானந்த் இயக்கிய விஸ்வரூபம் படத்திலும், டைரக்டர் கே. விஜயன் இயக்கிய சந்திப்பு படத்திலும் ஸ்ரீதேவிக்கு சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவரது மகன் பிரபு காலத்தில் பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நளினி, அம்பிகா, ராதா போன்ற நடிகைகளுக்கும் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்தார்.
இப்படி ஒரு பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தவிர வேறு எந்த நடிகருக்கும் அமையவில்லை என்பதே நமது கருத்தாகும். இப்படி ஒரு ஜோடி பெருமைகளை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அமைந்தது பெருமையிலும் பெருமையாகும்.
சந்தியாவின் மகளான நடிகர், நடிகையின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் சிவாஜி கணேசன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். இப்படி ஒரு ஜோடி பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தவிர வேறு யாருக்கும் அமையாது, அமையவில்லை என்பதே எமது கருத்தாகும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்