BREAKING NEWS

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 172 மாணவர்களுக்கு கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் கல்விச்சீரும், 26 மாணவர்களுக்கு விலை உயர்ந்த மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் 6-ஆம் ஆண்டு கல்விச்சீர் மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை துணை ஆட்சியர் தமிழ்செல்வன், சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்ற 6-ஆம் ஆண்டுக்கான விழாவில் கல்விச்சீர் வழங்கப்பட்டன.172 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய கல்வி சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.பூவாமி கிராமத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லும் 26 பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யபட்டன.

CATEGORIES
TAGS