BREAKING NEWS

நிலக்கோட்டையில் தி.மு.க கட்சி ஒன்றிய செயலாளர் பிறந்தநாள் விழா.

நிலக்கோட்டையில் தி.மு.க கட்சி ஒன்றிய செயலாளர் பிறந்தநாள் விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிகண்டன். இவரது 61 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக கட்சி ஒன்றிய தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

 

ஆ வில் திமுகவினர்கள் அனைவரும் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டனுக்கு மாலை மரியாதை, கிரீடம் உட்பட்ட பல்வேறு மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

 

ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, செல்வம், ஒன்றிய கவுன்சிலர் தியாகு, ரோஸ் நெடுமாறன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விமல், கொம்புகாரன் பட்டி திமுக கிளை செயலாளர் சுரேஷ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முத்துவேல், மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

CATEGORIES
TAGS