BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு எருமை மாடு……

தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு மாதமாக அதிக வெயிலின் தாக்கம் காணப்பட்டது வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து பல இடங்களில் காட்டுதீ பரவியது.

இந்நிலையில் நேற்று இரவு குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது 93 எம் எம் மழை பதிவாகி உள்ளது.

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெப்பத்தினால் நீலகிரி மாவட்டத்தில் இரவு வேளையில் பெட்ஷீட் கம்பளிகள் தேவையில்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

நேற்று பெய்த மழையில் வளர்ப்பு எருமை மாடு ஒன்று குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆனந்த குளியல் போட்டது நேற்று இரவு பெய்த மழையால் சீதோசன நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது வெப்பம் தணிந்துள்ளது.

CATEGORIES
TAGS