BREAKING NEWS

`நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

`நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.

`நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படத்தைப் பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம், “நெஞ்சுக்கு நீதி”. இது இந்தியில், ஆயுஷ்மன் குரானா நடித்து வெற்றி பெற்ற ’ஆர்டிகிள் 15’ என்ற படத்தின் ரீமேக். இதில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கியுள்ளார். வரும் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் நேற்றுப் பார்த்தார்.

பிறகு படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )