BREAKING NEWS

பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தயாளன் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி ராமன் வரவேற்புரையாற்றினார்

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு கூட்டத்தில் பேசிய அவர் தமிழக முழுவதும் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

நாங்கள் செய்யும் இந்த பணியானது மிகவும் ஆபத்தானது இதனால் இதில் எங்கள் உயிர்களுக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை இந்த நிலையில் இந்த பணியை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

பணியின் உயிர் சேதம் ஏற்படும் போது அவர்களது குடும்பம் குழந்தைகள் கல்வி என எதிர்காலம் பெரிதும் பாதிக்க படுகிறது இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் தொழிலாளர் நல வாரியத்தில் தமிழக அரசு இணைத்திட வேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

300க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் காப்பீடு ஆகியவை வழங்கப்பட்டது

மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் மாவட்ட செயலாளர்கள் வீரப்பன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் கொண்டார்கள்.

https://youtu.be/spm_Y9Ymzd4

CATEGORIES