BREAKING NEWS

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி மாணவி காவியஜனனி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .

தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என 500க்கு 499 மார்க் எடுத்து உள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மராஜ்- வசந்தி தம்பதியின் மகளான காவிய ஜனனி கமுதி ரரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பில் இதேபோன்று அதிக மதிப்பெண் எடுத்து கலெக்டர் ஆவதே எனது லட்சியம் என காவியஜனனி தெரிவித்துள்ளார். மாணவி காவிய ஜனனிக்கு பள்ளியின் கல்விச் சங்கத்தின் தலைவர் அப்துல்லா, நிர்வாக அலுவலர் முஹம்மது இர்ஷாத், தாளாளர் ஆயிஷா பீவி, முதல்வர், ஆசிரியை சர்மிளா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்து கேக் ஊட்டி, பாராட்டு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள் காவிய ஜனனிக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS