BREAKING NEWS

பர்கூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.பி , நகர செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஒன்றிய குழு தலைவர் , முன்னாள் கவுன்சிலர்கள் , மாவட்ட இணை செயலாளர் , முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர், ஒன்றிய பொருளாளர் , கிளைச் செயலாளர்கள் , மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து மனித சங்கிலி கை கோர்த்தவாறு கோசங்கள் எழுப்பினர்.

CATEGORIES
TAGS